அபிமான எழுத்தாளரின்
பேச்சைக் கேட்க
அங்கில்லாமல் போனதால்
எப்படி இருந்தது
என்றறிய
இரண்டு மூன்று பேரை
அழைத்துப் பேசுகையில்
அப்படியே அவரின்
வழக்கமான பேச்சு
என்றார்கள்.
அதுவாகவே கண்ணீர்
ஐந்தாறு முறை
துளிர்த்ததென்றார்கள்.
அன்பைப் பற்றிதான்
இருந்திருக்கும்
அத்தனையும்.
o
(கல்யாண்ஜி அவர்களுக்கு)
அருமை.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி. பிறந்த நாள் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குநன்றி செல்வராஜ் ஜெகதீசன்:)!
பதிலளிநீக்கு