ஆண்கள்
அபிநயிப்பது
அரிதாய்
எப்போதாவது
அனேக நேரம்
பெண்களால்
அபிநயித்துக்
காட்டப்படும
புறப்படுவதற்கு
முந்தைய
விமானப் பாதுகாப்பு
முறைகளை
எப்போதும் பார்ப்பதில்லை
இவனும்.
இன்றைக்குப் பார்க்க
நேர்ந்ததில்
எதிர்வந்து
விழுந்த
தண்ணீரில் விழ
நேர்ந்தால்
அணிய வேண்டிய
ஆடை
மூச்சுப்
பிரச்னைக்கு
மூக்கைச் சுற்றி
அணியும் மாஸ்க்
என
உபயோகிக்க
விரும்பாதவையும்
உண்டுதானே
உலகத்தில்.
o
(திண்ணை : 01-05-2009)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக