21 மே 2009

என்றாலும்...

படிக்கவென்று
சில பிடித்த
புத்தகங்கள்

நெடுந்துயில்
கொள்ளவொரு
நீள் பொழுது

காணும்
நிகழ்வொன்றை
கவி புனைய
விழையும் மனம்

என்றாலும்
இனிப்பதில்லை
எந்தவொரு
விமானப் பயணமும்

இடையிடையே
முகம் காட்டும்
இந்த மெலிதான
மரண பயத்தில்.

o

4 கருத்துகள்: